வகைப்படுத்தப்படாத

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் புதிய சட்டம்

(UDHAYAM, COLOMBO) – மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மின்சார விநியோக கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையாலன குறைந்தபட்ச இடைவெளி தொடர்பில் புதிய ஒழுங்குவிதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1000 வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும்க ம்பிகளுக்கும், கட்டிடங்களுக்கும் இடையில் குறைந்தது 2.4 மீற்றர் இடைவெளி காணப்பட வேண்டும்.

அத்துடன், அதிக வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் மின்சார கம்பிகளுக்கும், கட்டிங்களுக்கும் இடையில் அதிக இடைவெளி காணப்பட வேண்டும்.

குறைந்தபட்ச இடைவெளிக்கும் குறைவான இடைவெளியில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுமாயின், அது சட்டவிரோதமாகும் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது குறித்த விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான ஆலோசனைகள் அனைத்து மாகாண சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு இலங்கை மின்சார சபை அல்லது இலங்கை தனியார் மின்சார நிறுவனம்ஆகியவற்றின் பாதுகாப்புச் சான்றிதழைப் பெற வேண்டும் என இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு

‘Ali Roshan’ remanded

අරුවක්කාලූ කසළ රඳවනය වෙත කසළ රැගෙන යාම ඇරඹේ