வகைப்படுத்தப்படாத

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த சில வழிகள்

* எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.

* பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்சினை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.

* போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

* கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.

* கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

* கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.

* விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.

* குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.

* எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.

* குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.

Related posts

திருமதி .தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது

நலன்புரி நிலையங்களில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர்

West Indies beat Afghanistan by 23 runs