(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த மனுவை முழுமையான நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட மனித படுகொலைகள் மற்றும் காயமேற்பட்ட சம்பவத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.