சூடான செய்திகள் 1

விஜேதாச ராஜபக்ஷவிற்கு 500 மில்லியன் ரூபா நட்டயீட்டை வழங்குமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு உத்தரவு

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கடிதம் ஒன்றை பிரசுரித்தமை தொடர்பில் அவருக்கு 500 மில்லியன் ரூபா நட்டயீட்டை வழங்குமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (30) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ, லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் குற்றச்சாட்டின் கீழ் 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய இருந்த தீர்ப்புக்கு எதிராக லேக்ஹவுஸ் நிறுவனம் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தது.

மேற்படி அந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்களுக்கு எதிராக முறைப்பாடு…

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு