வகைப்படுத்தப்படாத

படகு ஒன்று கவிழ்ந்ததில் ஏழு பேர் மரணம்

ஹங்கேரியின் தலைநகர் புடாபஸ்ட்டில் தானூபே நதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்த பட்சம் ஏழு பேர்  மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 19 பேர்  காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகு நீரில் மூழ்கிய போது அதில் 33 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் தென் கொரியாவைச் சேர் ந்தவர்கள். இந்தப் படகு இன்னொரு படகுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹங்கேரியின் அரச ஊடகம் அறிவித்தள்ளது.

தானுபே நதி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் ஒரு பிரதேசமாகும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்கு படகுச் சவாரி மேற்கொள்வதுண்டு. அண்மைக்காலங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நதியின் நீர்  மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

நதியில் மூழ்கிய படகின் பெயர்  கடல்கன்னி என்பதாகும். இது இரண்டு மாடிகளைக் கொண்ட 45 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட படகு. இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கி உள்ளனர்.

 

 

 

 

Related posts

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

680 மில்லியன் டொலர் ஊழல்

எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்