கேளிக்கை

ஹன்சிகா படத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் சிம்பு?

(UTV|INDIA) ஹன்சிகா நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரிவது குறித்து “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
சிம்பு உடனான தருணங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, சிம்பு ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, “சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.

Related posts

இலியானாவா இது?

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பலி