சூடான செய்திகள் 1வணிகம்

சீகிரியவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

(UTV|COLOMBO) சீகிரியவை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சீகிரிய மேலதிக பணிப்பாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்தார்.

மேலும் அவர் தற்சமயம் நாளொன்றிற்கு சுமார் 800க்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், 100க்கும், 150க்கும் இடைப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பொசொன் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

 

Related posts

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல்…

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

ஷாபிக்கு எதிராக விசாரணை இன்று