உள்நாடு

“14 மூளைகள் இருந்தாலும் இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவது கடினம்”

(UTV | கொழும்பு) – உலகில் தற்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும், நிதி அமைச்சருக்கு ஏழு மூளைகளுக்கு பதிலாக பதினான்கு மூளைகள் இருந்தாலும் டொலர் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடியை நீக்குவது மற்றும் பொருளாதாரத்தை மீட்பது இலகுவான காரியம் அல்ல என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

“பொதுஜன பெரமுன கட்சியினை உருவாக்கி இந்த நாட்டை நல்லாட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றிய தலைவர், கொரோனா தொற்று, எரிபொருள் வரிசை, டொலர் தட்டுப்பாடு, ரஷ்யா உக்ரேன் மோதல் இவற்றுக்கு நிதி அமைச்சர் பழியாகாது.

உதய கம்மன்பில இந்நாட்டின் மின்சக்தி அமைச்சர் என்பதை அறியாமல் செயற்படுகின்றார். குறைபாடு இருப்பின் அமைச்சரவையிலோ அல்லது நாட்டின் தலைவரிடமோ பேச வேண்டும்.

மற்றபடி காலை, மாலை வேளைகளில் மின்வெட்டு என்றும், எப்போது மின்சாரம் வரும் என்றும், இன்னும் மூன்று மாதங்களுக்கு மின்சாரம் இருக்காது என்றும் கூறி மக்களை மிரட்டுவது சரியில்லை.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் உள்ளது, இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க நாம் ஒன்றுபட வேண்டும். ஆளும் கட்சிகள் ஒன்று கூடி அவர்களின் கேள்விகளுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு உள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் ஒரு குழு தனித்தனியாகச் சென்று மாநாடுகளை நடாத்தி அரசாங்கத்தில் அமர்ந்து எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆயுதம் வழங்குவார்கள். இது தார்மீக ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பொருத்தமானது அல்ல..”

Related posts

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

editor