உள்நாடு

14 உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

(UTV | கொழும்பு) –     நாட்டில் தட்டுப்பாட்டில் உள்ள 14 உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர், தற்போது மிக அத்தியாவசியமாக தேவைப்படும் 14 உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுமாக இருந்தால் மக்கள் தங்கள் உயிர்களை இழக்க நேரிடும். எனவே, இது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் விவாதித்து அவற்றை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்,” என்று கூறினார்.

இதேவேளை தற்போது பற்றாக்குறையாக உள்ள சுமார் 130 வகையான மருந்துகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு போதுமான மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு ஏற்கனவே உள்ளது, இது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு போதுமானது, ஆனால் ஒரு வருடத்திற்கு இல்லை. அது தான் உண்மை.384 வகையான மருந்துகள் இன்றியமையாதவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 130 அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. கடைகளில் பற்றாக்குறை இருப்பினும் குறித்த மருந்துகளை மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

எவ்வாறாயினும், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பற்றாக்குறையாக இருக்கும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்புக்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது, இது இன்னும் நான்கு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Related posts

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

editor

பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்திய வர்த்தமானி வெளியீடு

புகையிரதக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்