சூடான செய்திகள் 1

13ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு – மீண்டும் கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – 13ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல், இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் இந்த வாரம் முதல், பணிப்புறக்கணிப்பை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைச் செயலாளர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்