சூடான செய்திகள் 1

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

(UTV|COLOMBO) நாடு முழுவதிலும் கடந்த ஐந்து மாத காலப் பகுதியில்  17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 26 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அதிக நோயாளர்களில் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 3909 பேர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

 

Related posts

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கு சஜித்திடம் தீர்வு

கொட்டாஞ்சேனை வைத்தியர் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது