வகைப்படுத்தப்படாத

காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|NEPAL) நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று, சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள நேபாள இராணுவம் மற்றும் ஆயுதமேந்திய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 

Related posts

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித

நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ

பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு