சூடான செய்திகள் 1

2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி

(UTV|COLOMBO) 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களையும் அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.திறைசேரி மற்றும் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சனத் ஜி டி சில்வா தெரிவித்தார்

அதன்மூலம் இந்த வருட இறுதிக்குள் 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அரச ஊழியர்கள் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்வர். வைத்தியசாலை செலவினங்களுக்கு மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிராமல் சிகிச்சை பெறும் செலவினங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு

இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.வி

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!