சூடான செய்திகள் 1வணிகம்

சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜவன பரிபாலன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 21 இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, இதுவரையான காலப்பகுதிக்குள் 165 பேரே சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகை தந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சிங்கராஜ வனத்திற்குக் கிடைக்கும் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜவன பரிபாலன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி சாதாரண மாதமொன்றில் 1,500 தொடக்கம் 2,000 வரையான சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனத்திற்கு வருகை தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்

பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்பு