கிசு கிசுசூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம்

(UTV|COLOMBO) 52 நாட்கள் அரசியல் பிரளயத்தின் போது, மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஆதரவினைக் கோரி தொலைபேசியில் உரையாடிய உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

எஸ்.பி திசாநாயக்க, 52 நாட்கள் அரசியல் ஆட்சியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவுக்கும் இவ்வகையிலான கோரிக்கை ஒன்றினை முன்வைத்த குரல்பதிவும் அண்மையில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குரல்பதிவு

இதேவேளை, கடந்த 22 ம் திகதி இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றில் உரையாற்றும் போது, 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது எங்களின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உங்கள் அணியில் இணைந்திருந்தால் அவர் நல்லவர் அவர் மீது இந்த இனவாதப்பட்டம் சுமத்தி இருக்கமாட்டார்கள் என பாராளுமன்றில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

விமல் வீரவங்ச குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்