சூடான செய்திகள் 1

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்த முடியாது

(UTV|COLOMBO) அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிக் கொள்வதற்கு சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

குறித்த சுற்றறிக்கை அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் சிங்கம், தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர ஏனைய எந்த மொழிகளையும் காட்சிப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

அதிபர் வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி

சிறந்த துறைமுக தரப்படுத்தலில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது