வகைப்படுத்தப்படாத

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து

(UTV|AMERICA) பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/TRUMP.png”]

Related posts

பிரதமராக ரணிலே பதவி வகிப்பார்

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இடைக்கால தடை உத்தரவு

விமானம் கடலில் வீழ்ந்து விபத்து