சூடான செய்திகள் 1

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றமை குறித்து தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் பிஜேபி பெற்றுள்ள பெரும்பான்மை வாக்குகள், இந்திய மக்கள் பிரதமர் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்