சூடான செய்திகள் 1

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|COLOMBO) முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு 2019 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 23,231 வரையிலும் ஏனைய பதவி தரத்திலான மாதாந்த கொடுப்பனவு 19,350 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது அறிவித்திருந்தார்.

 

Related posts

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்