சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

(UTV|COLOMBO)  கேரள கஞ்சாவுடன், மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இருவர் நேற்று (22ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – பரயன்குளத்திலிருந்து சென்ற காரிலிருந்து 142 கிலோ 812 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கஞ்சாவைக் கொண்டுசென்ற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுப்போருக்கு சிறைத்தண்டனை

முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் திங்களன்று திறப்பு