சூடான செய்திகள் 1வணிகம்

பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்?

(UTV|COLOMBO) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றுவந்த வர்த்தக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து அரிசி மற்றும் ஆடை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  பாகிஸ்தான் உருளைக்கிழங்கு இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,  வணிக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பபாலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உற்பத்திகளை, இஸ்லாமிய வர்த்தகர்களே  இறக்குமதிசெய்து அவற்றை தமது விற்பனையாளர்களுக்கு விநியோகித்து வந்தனர்.

இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் உற்பத்திகள்  இலங்கை துறைமுகங்களில்  தற்போது வெளியேற்றப்படாதுள்ளன. நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக, இறக்குமதியாளர்கள் அவற்றை வெளியேற்றிக்கொள்ளாது உள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில், பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதுவரிடம் கலந்துரையாடியுள்ளதாக, வணிக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பபாலி  தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

நாட்டி 12வது மரணமும் பதிவு

இன்று மீண்டும் கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்