சூடான செய்திகள் 1

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி இன்று

(UTV|COLOMBO) உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி இன்றாகும்.

இந்த வருடத்தில் தரப்படுத்தலின் இடைவெளியை குறைப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹவுலின் சாகோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட முகவர் நிலையமாக தமது சேவையை முன்னெடுத்து வருகின்றது. இதன் பிரதான பணியாக தரப்படுத்தல் அமைந்துள்ளது.

இன்று அனுஷ்டிக்கப்படும் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இம்முறை தரப்படுத்தல் இடைவெளியை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை காலத்திற்கு ஏற்ற நடவடிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு உறுப்பு நாடுகள் மத்தியில் இந்தத் தினம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய பயணத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் தர நிர்ணயங்களை எட்டுவதற்கான வழிமுறைகள், அதற்காக நடைமுறைபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த பொதுவான தரப்படுத்தல்களை பின்பற்றுவதானது பொருளாதார வளர்ச்சிக்கும் புத்தாண்டு புத்தாக்கங்களுக்கும் துணை புரியும் என ஜனாதிபதி மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருநாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழியமைக்கும் புத்தாக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு ஆற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  சரியான தெரிவின் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தகவல்களை கையாள்வது தற்போதுள்ள முக்கிய சவாலாகும்.

மூன்றாம் உலக நாடுகள் மிலேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் சர்வதேச தர நியமங்களை செயற்படுத்தும் போது டிஜிட்டல் தொழில்நுட்ப பாவனையில் காணப்படும் ஒழுங்கின்மைகளை குறைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கங்களில் ஒன்றாகும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து

சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு