வகைப்படுத்தப்படாத

இலங்கையர்களுக்கான கனடா வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

(UDHAYAM, COLOMBO)  – இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று, கனடாவின் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான கனடாவின் வீசா நடைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.

இலங்கையர்கள் யாராகினும் கனடாவுக்கு பயணிக்க வீசா பெறுவது கட்டாயமாகும் என்று கனேடிய தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

විරෝධතාවක් නිසා ගාලු මුවදොර පිවිසුම් මාර්ගය වසා දමයි.

பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை வெளியேற்றுமாறு உத்தரவு…

சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி