விளையாட்டு

சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக IPL கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

(UTV|INDIA) இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் செம்பியன் பட்டத்தை 4வது தடவையாக மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

நேற்று ஐதராபாத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

அந்த நிலையில், 150 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. மலிங்கா வீசினார். முதல் பந்தில் வாட்சன் சிங்கிள் அடித்தார். 2-வது பாலில் ஒரு சிங்கிள், 3-வது டபுள் அடித்தார் வாட்சன். 4-வது பந்தை சந்தித்த வாட்சன் இரண்டு ரன் எடுக்க முயற்சித்து  ரன் அவுட் ஆனார். 5-வது பந்தில் 2 ரன்கள், கடைசி பாலில் 2 ரன் தேவை. எதிர்கொண்ட ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை ஐபிஎல் கோப்பையை வென்றது.

 

 

 

 

 

Related posts

இலங்கை – இந்திய மோதும் 2ஆவது இருபதுக்கு 20 இன்று

மாலி தலைமையிலான முதலாவது இருபதுக்கு -20 இன்று

ஆட்ட நிர்ணய விசாரணைகளுக்காக சங்காவுக்கு அழைப்பு