சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

குருணாகல் வலய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தனியார் வங்கி ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பதுளை சம்பவம்-மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது

UPDATE- தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

இன்று தேசிய துக்கதினம்…