வகைப்படுத்தப்படாத

கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில் கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்திய தலைநகரில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக அவர் உரையாற்றுகையில் பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

உலக பொருளாதாரத்தி;ற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் சமுத்திர பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சகல நாடுகளும் கைகோர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர வலயத்தில் டிஜிட்டல் பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது. இதன் மீது சகலரும் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத்தின் சகல வடிவங்களையும் ஒடுக்க நாடுகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார்.

ஒருவரது பயங்கரவாதத்தை மற்றவரின் விடுதலையாக கருத முடியாதென பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பல்வேறு குழுக்களின் அழுத்தங்கள் மற்றும் அபிலாஷைகள் காரணமாக இந்துமா சமுத்திரத்தில் கடல் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவதால் பிரயோசனம் இல்லை – சி.வி

வென்னபபுவ நகரில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான ‘லாஸ்ட் சான்ஸ்’ முற்றுமுழுதாக தீக்கிரையானது [Images]

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்