சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு – கல்வி அமைச்சு

(UTV|COLOMBO) கல்வி நடவடிக்கைகள் பாடசாலைகளில்  தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 கல்வி அமைச்சுஅறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ள நேற்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களின் நேற்றைய தினத்தில் ஆகக்கூடுதலான மாணவர்கள்

வடக்கு மாகாணத்தில்- 60 சதவீதம் மாணவர்கள்

ஊவா மாகாணத்தில் -46.47 சதவீதம் மாணவர்கள் .

கிழக்கு மத்திய சப்பிரகமுவ தெற்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் -30 சதவீதத்துக்கு அதிகமாகும்.

மேல் மாகாண பாடசாலைகளின் மாணவர்களின் வருகை நேற்றைய தினம் 13 சதவீதமாக  இருப்பினும் கடந்த இரு தினங்களையும் ஒப்பிடுகையில் இது அதிகமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டில் தீ

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

இரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்