சூடான செய்திகள் 1

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

(UTV|COLOMBO) களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 12 அரை மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாத்துவை , வஸ்கமுவ , களுத்துறை – வடக்கு மற்றும் தெற்கு , கட்டுகுருந்த , நாகொடை , பேருவல , அளுத்கம , தர்கா நகரம் , மற்றும் பெத்தொட ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி, பயாகல , பிலமிநாவத்த போம்புவல , மக்கொன , களுவாமோதரை மற்றும் மொரகொல்லை போன்று பிரதேசங்களுக்கு நாளை முற்பகல் 8 மணி தொடக்கம் இரவு 8.30 வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்களுக்கு எதிராக முறைப்பாடு…

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும்…