சூடான செய்திகள் 1

விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை(08) முதல்

(UTV|COLOMBO) நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுலாக்க சுகாதார அமைச்சு தயாராகிறது.

இந்த வேலைத்திட்டம் நாளை தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிலுள்ள 18 மாவட்டங்களில் அதிக டெங்கு அபாயமுள்ள 75 சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் 16 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 23 பேர் உயிரிழந்ததாக சிறப்பு நிபுணர் ஹசித திசேரா குறிப்பிட்டார்.

மேற்படி,வாரத்தில் ஒரு முறை சுமார் 30 நிமிட காலம் தமது சுற்றுப் பகுதி தொடர்பில் கண்டறிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் பரவும் அனர்த்தத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் வைத்தியர் அசித திஸேரா  மேலும் தெரிவித்தார்.

 

 

Related posts

வானிலை அவதான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த