(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.