(UTV|COLOMBO) சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருக்கும் வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை காவல்துறையில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை காவல்துறையில் ஒப்படைப்பதற்காக கடந்த சனிக்கிழமை முதல் இரண்டு நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தது
மேற்படி காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர உடனடியாக அருகில் உள்ள காவல்துறை நிலையங்களில் அந்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.