சூடான செய்திகள் 1

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO) தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு, 2ம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கிறன.

அதற்கமைய நேற்றைய தினம் பாடசாலைகளை சுற்றியுள்ள, சுற்றுபுறத்தில் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள எந்த ஒரு பாடசாலைகளுக்கு அருகிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பாடசாலைகளுக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியான வாகன தரிப்பிடங்கள் மற்றும் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

உருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு குழு

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!