வகைப்படுத்தப்படாத

விமானம் தீப்பற்றி எரிந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் மொஸ்கோ விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம், மொஸ்கோவில் உள்ள ஷெரெமெடியேவோ (Sheremetyevo) விமானநிலையத்தில் இருந்து (Murmansk) மர்மான்ஸ்க் நகர் நோக்கி புறப்பட்ட நிலையில், ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும், மொஸ்கோவில் தரையிறக்கப்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மீன்பிடித் துறைமுகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

China’s Sinopec sets up fuel oil unit in Sri Lanka

European Parliament opens amid protest and discord