கிசு கிசுவிளையாட்டு

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!

(UTV|INDIA) சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி குறித்து விஸ்வாசம் பட ஸ்டைலில் ஹர்பஜன் சிங் பதிவிட்ட ட்வீட் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை சேப்பாக்கத்தில்  நடந்த லீக் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கி டெல்லி அணி, சென்னை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய தோனி, 2 அட்டகாசமான ஸ்டம்பிங்களை செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ரோஹித அரசியலில்

Youtube செயலிழப்பு-ஹேக்கிங் செய்யப்பட்டதா?

குழப்ப விரும்பவில்லை – ஏமாறவும் தயாரில்லை