சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

(UTV|COLOMBO) எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்கைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் என உரிய அதிபர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவலை விடுத்துள்ளார்.

மேலும் டிசம்பர் மாதம் நடாத்தப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள விஷேட தேவைகள் உடைய விண்ணப்பதாரிகளுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு