சூடான செய்திகள் 1

600 கடிதங்களுடன் கைதான மூவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்

(UTV|COLOMBO) 600 கடிதங்களுடன் கைதானமூவரும் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

 

 

 

 

 

Related posts

அமைச்சர் அகில விராஜ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

பேசும் மொழியினை அடிப்படையாகக்கொண்டு மக்கள் வேறுபடக் கூடாது…

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்