வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் பதவி நீக்கம்

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் (Gavin Williamson) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உயர்மட்ட தேசிய பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், வௌியானதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, குறித்த பதவியை வகிப்பதற்கு கவின் வில்லியம்சனின் இயலுமை மீதான நம்பிக்கையினை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இழந்துள்ளதாகவும் அவரைப் பதவியிலிருந்து அகற்றியுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை பென்னி மோர்டவுண்ட் (Penny Mordaunt) பொறுப்பேற்கவுள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு

மக்களின் மேல் அரசாங்கத்திற்கு இத்தனை மனிதாபிமானமா?

உலகிலேயே அதிக அமைதி நிலவும் நாடாக ஐஸ்லாந்து…