சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) ஃ​போனி சூறாவளியானது இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் மேற்கு பகுதியின் மத்தியில் ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு

மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது