சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது

(UTV|COLOMBO) உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது.

உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

மேலும் இதற்காக தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்புக்கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 0711 333 330 திருமதி. குமாரியுடனும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 0703 762 997 திரு.பிரேமகுமாருடனும் கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்கள் 0703 728 985 திரு.ருவனுடனும் மேலதிக தகவல்களுக்கு 071 433 3331 திரு.நவீந்திரனுடனும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தகவல்களை அறிந்துக்கொள்ள www.redcross.lk . எனும் இணையத்தளம் மூலமும் E-mail :info@redcross.lk என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ள முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

ஆறுகளில் நீர்மட்டம் குறைகிறது

அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!

சுவிட்சர்லாந்து தூதவர் இல்லம்: விமானப்படை அதிகாரி தற்கொலை