விளையாட்டு

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி

(UTV|INDIA) ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய  ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, அதிரடியாக விளையாடி, 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி வீரர்கள், ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்ததால், அந்த அணி வீரர்களுக்கு ரன் குவிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையடுத்து, அந்த அணி ஐதராபாத் அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

14 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி

நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி