(UTV|BRAZIL) பிரேசில் நாட்டின் சவ் பவ்லோ நகரில் நடைபெற்ற பேஷன் வாரத்தில், கேட் வாக்-ன் (Cat walk) போது மயங்கி விழுந்த பிரேசில் மாடல் டேல்ஸ் சோர்ஸ் உயிரிழந்தார்.
‘ஒக்சா’ என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மேடையில் கேட் வாக் செய்து திரும்பியபோது டேல்ஸ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கிய உடனே அவரை அங்கிருந்த நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆகவே மருத்துவமனைக்கு சென்று அவரை சாேதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறப்பை உறுதிசெய்துள்ள ஒக்சா நிறுவனம், டேல்ஸ் சோர்ஸ் குடும்பத்துக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து கொண்டனர்.