சூடான செய்திகள் 1

நாட்டையே உலுக்கிய வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம்

(UTV|COLOMBO) நாட்டையே உலுக்கிய 8 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தியாகின்றது.

மேலும் கடந்த 21 ஆம் திகதி காலை 8.45 முதல் 9.30 வரையான காலப்பகுதியில் கொச்சிக்கடை புனித அந்தோனியார், மட்டக்களப்பு சீயோன் மற்றும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் ஆகிய தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இத்துடன் கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டிய சினமன் கிரேன்ட் ஆகிய விருந்தகங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வெடிப்புச் சம்பவங்கள் நடத்தப்பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் தெமட்டகொடை பகுதியில் தேடுதல் மேற்கொண்ட போது வீடொன்றில் வெடிப்பு சம்பவம் பதிவானது.

அன்றைய தினம் பிற்பகல் 1.45 அளவில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு அருகில் உள்ள விருந்தகம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டார்.

குறித்த இந்த தாக்குதல்கள் காரணமாக 359 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதும் கடந்த 25 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுகாதார அமைச்சு 253 பேர் மாத்திரமே உயிரிழந்ததாக அறிவித்திருந்தது.

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

காலநிலையில் மாற்றம்