சூடான செய்திகள் 1

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்பு

(UTV|COLOMBO) துப்பாக்கி மோதல் பதிவாகி இருந்த கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர் , பரவிவரும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை