சூடான செய்திகள் 1

வெடிபொருட்களுடன் கூடிய சந்தேகத்திற்கிடமான லொறி – வேன் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு

(UTV|COLOMBO) வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் வேன் ஒன்றும் கொழும்பிற்குள் வந்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடும் என சந்தேகிக்கப்படும் மேலும் சில வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

5 மோட்டார் சைக்கிள்கள், கெப் வாகனம் மற்றும் வேனொன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்களுடன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்படும்?

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று