சூடான செய்திகள் 1

விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டுக்காக ​சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக, விசேட போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீ​டிப்பதற்கு, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக மீண்டும் கொழும்புக்குத் திரும்ப முடியாத பயணிகளுக்காக குறித்த விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை ரயில்வே திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன கடந்த 8ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை புதுவருட விசேட போக்குவரத்து சேவையை முன்னெடுத்திருந்த நிலையிலேயே குறித்த விசேட போக்குவரத்து சேவைகள் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தாடி விவகாரம் – மாணவர் நுஸைபுக்கு ஆதரவாக சாலிய பீரிஸ் ஆஜர்!

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

கொரோனா தடுப்பு மருந்து இருக்கும் இடம் வெளியானது