இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கூகுள் இன்றைய தினம் தனது இலங்கைக்குரிய முகப்புப் பக்கத்தில் கறுப்பு நிறத்திலான ரிபனை பிரசுரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த உயிர்ப்பு ஞாயிறுதினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் தாக்குதலைக் கண்டித்து இன்றையதினம் 23 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.