சூடான செய்திகள் 1

(UPDATE)-பாராளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)   பாராளுமன்றமானது நாளை(24) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று(23) மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றமானது சபாநயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் தனது உரையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


இன்று பிற்பகல் 01 மணி முதல் 02 மணி வரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

அதன்போது, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட உரைநிகழ்த்தவுள்ளனர்.

அவசரகால சட்டம் குறித்த விதிமுறைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம்

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

பணிபுறக்கணிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!