சூடான செய்திகள் 1

நாடளாவிய வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் தொடர்பான விபரங்கள்…!

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் 62 சடலங்களும் மட்டக்களப்பு மருத்துவமனையில் 27 சடலங்களும் மற்றும் ராகமை மருத்துவமனையில் 7 சடலங்களும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களில் 9 வௌிநாட்டவர்களின் சடலங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த 250 க்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், உள்ளிட்ட சங்ரில்லா, சின்னமன் கிரேண்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஆகிய நட்சத்திர உணவகங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 45 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

“ராவண் 1” செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்!!