(UTV|COLOMBO) நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக டெங்கு நோய் தீவிரமாக பரவும் நிலை உள்ளதாக சுகாதாரத் துறையின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிலவும் மழையுடனான வானிலையானது, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நிலைமை உள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13,975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.