சூடான செய்திகள் 1

பெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்

(UTV|COLOMBO) இது கிறிஸ்தவ அடியார்களின் நாளேட்டில் முக்கியமானதொரு தினமாகும். இன்று(19) பெரிய வெள்ளியாகும்.

மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் நினைவுகூருவார்கள்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ அடியார்கள் இன்று விசேட ஆராதனைகளில் கலந்துகொண்டு யேசுவின் சிலுவை திருப்பாடுகளை நினைவுகூருவார்கள். அவர்கள் விரதமிருந்து வெள்ளை நிற ஆடை அணிந்து தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபடுவார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யேசு உயிர்த்தெழுந்த விதம் நினைவுகூரப்படும்.

 

 

 

 

 

 

 

Related posts

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

கல்வி சார் சமூகம் வளர்ச்சியடைவதன் மூலமே பிரதேசம் எழுச்சி பெறுகின்றது – அமைச்சர் றிஷாட் பதியுதீன்…

ஹெரோயினுடன் இருவர் கைது